2030-ல் இந்தியாவில் 20 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகும்:பன்னாட்டு நிறுவனங்கள் இலக்கு

புதுடெல்லி:

2030-க்குள் இந்தியாவில் 20 லட்சம்  மின்பயன்பாடு ஸ்கூட்டர்கள் விற்பனையாகும் என்று பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

 

 

உயர்ந்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு, ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ தொலைவு வரை செல்லக் கூடிய மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை மகாராஷ்டிர மாநிலம் கோவே கிராமத்தைச் சேர்ந்த வினோத் கோரே எனும் விவசாயி கண்டுபிடித்தார்.

பெட்ரோலுக்கு ஆகும் செலவில் 10 சதவீதம் மட்டுமே செலவாகும் என்பதால், இந்த மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் கரும்பு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்துவதால், மோட்டார் சைக்கிள்கள் வாங்க செலவழிக்கும் தொகையை 2 ஆண்டுகளில் மிச்சப்படுத்தலாம்.

வரும் 2030- 30 சதவீத கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால் , தற்போது 1 சதவீதம் மட்டுமே மின்சாரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கார்களை மின்சாரத்தில் சார்ஜ் செய்து இயங்க வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. கார்களில் சார்ஜ் செய்தவற்கான பேட்டரிகளின் விலை மிக அதிகமாக இருப்பதே காரணம். ஆனால் இரு சக்கர வாகனங்களின் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைப்பதால்,சாத்தியமாகும் என்று தெரிகிறது.

ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனையில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் மின் பயன்பாட்டில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் போது, உற்பத்தி செலவும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

விவசாயி கோரே தயாரித்துள்ள இரு சக்கர வாகனத்தை விட இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் பன்மடங்கு அதிகம் இருக்கும்.
எனினும், 2030- மின்பயன்பாடு ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் 20 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் மின்பயன்பாட்டில் இயங்கும் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரத் தயங்கும் நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது.