தீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்!

--

மீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த துல்லியமான தாக்குதலுக்கு காரணம் நமது சாட்டிலைட் தொழில்நுட்பமே என்ற தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.

கர்ட்டோசாட்-2, 2A, 2B மற்றும் 2C ஆகிய செயற்கைக்கோள்களின் படங்கள் மிக துல்லியமாக தீவிரவாதிகளின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டியுள்ளது எனவும் இதன் உதவியோடுதான் இந்தியாவால் வெற்றிகரமாக இந்த தாக்குதலை நடத்தி முடிக்க முடிந்தது எனவும் தெரியவருகின்றது. இத்தகவலை இஸ்ரோ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராணுவத்தின் ஆயுதபலத்துடன் இஸ்ரோவின் அறிவியல் பலமும் சேர்ந்தே இவ்வெற்றியை இந்தியாவுக்கு பரிசளித்திருக்கிறது.