அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது இந்தியாவின் முதல் பயணி ஹெலிகாப்டர் சேவை!

டில்லி:

ந்தியாவின் முதல் பயணி ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை , புனே, மற்றும் ஷீரடி பகுயில் இந்த ஹெலிகாப்டர் பயணிகள் சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சேவையை அமெரிக்காவைச் சேர்ந் பிளேடு என்ற  நிறுவனம்  செயல்படுத்த உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டேக்ஸி சேவை பெங்களூர் நகரில் கேம்பெ கௌடா சர்வதேச விமான நிலையம் மற்றும் எலெக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்கிடையே தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல, சபரிமலைக்கும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதன்முதலாக ஹெலிகாப்டர் பயணிகள் சேவை தொடங்கப்பட உள்ளது.  அமெரிக்காவில் பொது மக்கள் பயணத்திற்கான ஹெலிகாப்டர் சேவை வழங்கி வரும்,  மிகப்பெரிய ஏற்பாட்டாளரான ஃப்ளை பிளேட் நிறுவனம், இந்திய விமான நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி,  அக்டோபர் இறுதிக்குள் அதன் சேவைகளை இந்தியாவில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக  புனே, மும்பை மற்றும் ஷிர்டி ஆகியவற்றை இணைக்கும் விமானங்களுடன் தனது சேவையை தொடங்கும் இந்நிறுவனம், ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது சேவையை தொடங்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக, சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது, அதற்கான ஒப்புதல்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  முதல் பயணிகள் ஹெலிகாப்டர் 6 பயணிகளுடன் புனேவிலிருந்து புறப்பட்டு,  மும்பைக்கு அழைத்துச் செல்லும். பின்னர் அது யாத்ரீகர்களை ஷீர்டிக்கு அழைத்துச் செல்லும், இது புனே மற்றும் பின்புறம் இணைக்கப்படும். கடைசி விமானம் மும்பையில் இருந்து புனேவுக்கு மாலையில் புறப்படும்.

“இந்த சேவைகள் வாரத்தில் ஆறு நாட்கள் கிடைக்கும்” என்று பிளேட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அமித் தத்தா கூறினார். ஞாயிற்றுக்கிழமைகள்  விடுமுறை நாள் என்பதால், அன்று ஹெலிகாப்டர் சேவை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில்  ஏர்பஸ் எச்.சி 130 மற்றும் பெல் 407 என்ற 2  ஹெலிகாப்டர்களுடன் சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள பிளேட் நிறுவனம், அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளதாகவும்,  இந்த ஹெலி காப்டரின்,6 பயணிகள் மற்றும்   10 கிலோ வரை கொண்டு செல்ல முடியும் என்று தத் கூறினார். “கூடுதல் சாமான்கள் உள்ளவர்களுக்கு, ஒரு டாக்ஸி வழியாக அவர்களின் சாமான்களை இலக்குக்கு வழங்குவதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குவோம்” என்று தத்தா கூறினார்.

தொடர்ந்து கூறியவர், தங்களது நிறுவனம் அமெரிக்காவில் ஏற்கனவே ஹெலிகாப்டர் சேவை வழங்கி வருவதாகவும்,   அமெரிக்காவிற்கு வெளியே இந்தியாவில்தான் தங்களது முதல் சேவையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

பிளேட் நிறுவனம்,  டெல்லியைச் சேர்ந்த ஈக்விட்டி முதலீட்டு நிறுவனமான ஹன்ச் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன்  கூட்டு சேர்ந்துள்ளது, இது இந்தியாவில் நுகர்வோர் எதிர்கொள்ளும் தொழில்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பயன்படுத்தியுள்ளது.