ராஜஸ்தான்: இந்தியாவின் முதல் ‘மாடு’கள் நலத்துறை பாஜ அமைச்சர் சுயேச்சையிடம் வீழ்ந்த பரிதாபம்

ஜெய்ப்பூர்:

இந்தியாவிலேயே மாடுகள் நலத்துறைக்கு என்று தனியாக நியமிக்கப்பட்ட பாஜக அமைச்சர் ஒடாரம் தேவசி, சுயேச்சையிடம் தோல்வி அடைந்துள்ளார். இவர்  ‘மாடு’கள் நலத்துறைக்காக நியமிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநில  பாஜக அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது.இந்தியாவின் முதல் மாட்டு மந்திரி ஒடாரம் தேவசி ராஜஸ்தானில் சிரோஹி தொகுதியை இழந்துள்ளார்

பாஜ அமைச்சர் ஒடாரம் தேவசி

ராஜஸ்தானில் 99 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது. இதன் காரணமாக முதல்வர் பதவியை வசுந்தராஜே சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல அமைச்சர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களில்  ஒடாரம் தேவசி என்ற பாஜக அமைச்சர் சுயேச்சையிடம் தோல்வி அடைந்துள்ளனார்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அமைச்ச்ர  ஒடாரம் தேவசி  அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சன்யம் லோதாவிடம்  10,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.. தேவசிக்கு 71.019 வாக்குகள், சன்யம் லோதாவுக்கு 81,272 வாக்குகள் கிடைத்தன.

சுயேச்சை வேட்பாளரான சன்யம் லோதா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆனால் தற்போதைய தேர்தலில் அவர்  காங்கிரசில் இருந்து வெளியேறி சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.

தேவசி அந்த பகுதி மக்களால் போபாஜி என்று அன்போது அழைக்கப்பட்டு வருபவர். எப்போது வெள்ளை நிற வேஸ்டி துண்டுடன் காணப்படும் அவர் சிவப்பு நிரத்திலான தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் காதில் வளையம், கையில் ஒரு கம்பு இவற்றுடனே காணப்படுவார். அந்த உடையிலேயே அமைச்சரவை, சட்ட மன்ற கூட்டங்களில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நீராதார அமைச்சர் ராம்பிரதாப், காங்கிரஸ் வேட்பாளர் விநோத் குமாரிடம் சுமார் 15,522 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

வேளாண் அமைச்சர் பிரபுலால் சைனி 34,063 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் பையாவிடம் வீழ்ந்தார்.