இந்தியாவின் முதல் பிரத்யேக நாய் பூங்கா: ஐதராபாத்தில் திறப்பு

ஐதராபாத்:

ன்றியுள்ள ஜீவனான நாய்களுக்கான பிரத்யேக பூங்கா ஐதராபாத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுதான் முதன்முறை என்பதும், நாய்களுக்கான முதல் பூங்கா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் என்ற பகுதியில் இந்த பூங்கா, சுமார் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் 1 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை மாநில தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில்,  நாய்களுக்கான நடைபாதை, மருத்துவமனை உள்பட ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான திறந்த சூழல் அளிக்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.  பூங்காவில், வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கு  பயிற்சியளிக்கவும், அதனோடு விளையாடவும் பல அம்சங்கள் செய்துத் தரப்பட்டுள்ளது.

இந்த பகுதி ஏற்கனவே குப்பை கொட்டும் பகுதியாக இருந்தாகவும், அதை சமன்படுத்தி நாய்களுக்கான சிறப்பு பூங்காவாக மாற்றி இருப்பதாக, கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி கார்ப்பரேஷன் (GHMC) அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டிவிட் போட்டுள்ள  தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ்,  இந்தியாவில், வீட்டு செல்லப்பிராணிகளுக்காக சர்வதேச தரத்தில் உருவாகி உள்ள முதல் பூங்கா இதுவே. மேலும், இந்த பூங்கா கெர்னல் கிளப் ஆப் இந்தியாவின் சான்றிதழையும் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது போன்ற நாய் பூங்காக்கள் இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே உள்ள நிலையில், தற்போதுதான் முதன் முறையாக இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நாய்பூங்கா  ஐதராபாத் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

You may have missed