1assam1ஜோர்கட்:
ந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அதையடுத்து  இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த மாவட்டதின் இணை கமிஷனராக விரேந்திரா மிட்டால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நதிகளால் சூழப்பட்ட அழகிய குட்டி நதித்தீவான அசாம் மாநிலத்தில் மஜூலி தீவு இந்தியாவின் முதல் “தீவு மாவட்டம்” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய நதித்தீவும் இதுவே ஆகும்.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தீவு 144 சிற்றூர்களைக் கொண்டதாகும். இங்கு சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தீவுக்கு படகுகள் மூலம் மட்டுமே செல்ல முடியும். தினமும் நாளைக்கு இரு முறைதான் படகு போக்குவரத்து நடத்தப்படும்.
மஜூலி அசாமின் 35-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் சுருங்கிவரும் இந்தத் தீவு இனி அழிவிலிருந்து காக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  மேலும் இத்தீவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.
1assam