இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ. தனது“முகநூல் நண்பர்’ மீது   பரபரப்பு புகார்

பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானவர் பிரித்திகா யாஷினி. அவர் தற்போது சூளைமேடு காவல்நிலையத்தில்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

 

அதில்,”எதனக்கு முன் முகநூல் (பேஸ்புக்)  மூலமாக ஜனார்த்தனன் என்பவர் அறிமுகமானார். அவருடன் நட்பாக பழகி வந்தேன். இந்த நிலையில் , இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.   ஆனால் ஜனார்த்தனன் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் பிரித்திகா தெரிவித்திருந்தார்.

பிரித்திகாவின் புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் ஜனார்த்தனனை நேரில் அழைத்து விசாரித்தனர். “இனி எஸ்.ஐ. பிரித்திகாவுக்கு தொல்லை கொடுக்க கூடாது” என்று எழுதி வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ. ஒருவரே பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தது காவல்துறை வட்டாரத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.