துணைகலெக்டராக பொறுப்பேற்றார் இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்.

டில்லி:

ந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

இரண்டு கண் பார்வையையும் இழந்த  பிரன்ஞால் பாடில்,  லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று தேர்வை எதிர்கொண்ட நிலையில், அதை வெற்றிபெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். அவருக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டன் துணை கலெக்டராக பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் உஹான்ஸ்நகரைச் சேர்ந்தவர் பிரன்ஞால் பாடில். சிறு வயதில் கண்பார்வையை இழந்தவர், கலெக்டராவதே தனது கனவு என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அவரது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து தேவையான வசதிகளை செய்துவந்தனர்.  இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார்.

இதையடுத்து அவருக்கு கேரளாவில் துணைகலெக்டர் பணி வழங்கப்பட்டது. அந்த பணியை  பிரன்ஞால் பாடில் தற்போது ஏற்றுள்ளார். இவர்தான்  இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரன்ஞால் பாடிலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.