சிம்லா:

நாட்டின் மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி, தனக்கு பெயருக்கு முன்னாள் சவுகிதார் என பாஜகவினர் சேர்த்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து  பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில்,பா.ஜ., ஆட்சி நடை பெற்று வருகிறது.  இந்த மாநிலத்தை சேர்ந்தவர் 102 வயதாகும் ஷியாம் சரண் நேகி.

அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, இன்றுவரை  தெளிவான கண் பார்வை யுடனும், கேட்கும் திறனுடனும் இருக்கிறார். அவரது பொழுது போக்கு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பது.

தற்போதைய நிலையில், ஷியாம் சரண் நேகி நாட்டின், மிக மூத்த வாக்காளராக கருதப்படுகிறார். இவர், கடந்த  1951ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கை செலுத்தி கடமையாற்றி வருகிறார். தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையும் எதிர்நோக்கி உள்ளார்.

இவரை தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இந்திய தேர்தல்ஆணையம் நியமித்து கவுரப்படுத்தியது.  கடந்த 2010ல் நடந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வைர விழா நிகழ்ச்சி யின்போது, அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, நேகியின் கல்பா கிராமத்திற்கு வருகை புரிந்து  நேரில் சந்தித்து  கவுரவித்து, தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராக நியமித்தார்.

ஆனால், தற்போது காவலாளி எனப்படும் சவுகிதார் கோஷத்தை பாஜகவினர் பிரலப்படுத்தி வரும் நிலையில், நேகிக்கும், சவுகிதார் என்ற  அடைமொழியை போட்டு பாஜக தலைவர் புஷ்பராஜ் என்பவர் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

தனது  பெயருடன் சவுகிதார் இணைக்கப்பட்டு பாஜகவினர் பிரசாரம் செய்வதை அறிந்த நேகி கோபம் அடைந்தார். தனது பெயருக்கு முன்னாள் சவுகிதார் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டு போடுவது குறித்து ஷியாம் சரண் நேகி கூறியதாவது: தேர்தலில், என் ஓட்டு உரிமையை, முதலில் பதிவு செய்யவே விரும்பு கிறேன். வாக்காளர்கள், குறிப்பாக, இளைய தலைமுறை வாக்காளர்கள், தேர்தலில்போது நேரம் ஒதுக்கி, நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.