நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்!

மும்பை:

ந்தியாவின்  முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

1973 ஆம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவரான  காஞ்சன் சவுத்ரி கடந்த  2004 ம் ஆண்டு உத்தராகண்ட் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக நாட்டின் முதன் பெண் டிஜிபி என்ற பெயருக்கு சொந்தமானார்.  அதைத்தொடர்ந்து கடந்த   2007ம் ஆண்டு ஓய்வுப் பெற்றார்.

ஓய்வுக்குப் பிறகு ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து சமூகப் பணியாற்றி வந்தவர், கடந்த 2014ம் ஆண்டு  மக்களவைத் தேர்தலின்போது,  ஹரித்வார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  காஞ்சனா, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானதாக உத்தராகண்ட் காவல்துறை டிவிட் செய்துள்ளது.

அவரது மறைவுக்கு உத்தராகண்ட் காவல்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.