டில்லி:

ந்தியாவின் வனப்பரப்பு 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை  20 லட்சம் ஏக்கர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நாட்டிலேயே அதிக அளவிலான வனப்பகுதி உள்ள மாநிலமாக  மத்திய பிரதேசம் முதலிடத்தில்  உள்ளது. தமிழகம், கேரளா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களிலும் வனப்பகுதி அதிக அளவில் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி,  இந்தியாவில் உள்ள 24 சதவித வனப்பரப்பு பகுதியை 33 சதவிதமாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஸ் வர்தன் வெளியிட்ட அறிக்கையில்,  ‘‘நாட்டில் மொத்தம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 273 சதுர அடி வனப்பரப்பு உள்ளது. இந்திய புவியியல் பரப்பளவில் இது 21.54 சதவீதமாகும். மரங்களின் பரப்பளவு 93 ஆயிரத்து 815 சதுர கி.மீ., உள்ளது. இது 2.85 சதவீதமாகும்.

உலகளவில் வனப்பரப்பு குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இந்தியாவின் வனப்பரப்பு 6 ஆயிரத்து 778 சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. இது 0.21 சதவீதம் அதிகரிப்பாகும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, இந்தியாவின் வனப்பரப்பு 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை  20 லட்சம் ஏக்கர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக  தெரிவித்து உள்ளார்.