டில்லி

ந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்குச் சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராகக் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பிரணாப் முகர்ஜி பதவி வகித்து வந்தார்.  தற்போது 84 வயதாகும் அவர் சென்ற திங்கள் அன்று தமது டிவிட்டரில் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  தம்முடன் தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதையொட்டி ஆர் ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் இரத்தம் கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.  இதையொட்டி அவரது உடல்நிலை மிகவும் சீர் கெட்டுள்ளதாக வதந்திகள் பரவின.   இதை அவரது மகன் அபிஜித் மற்றும் மகள் சர்மிஷ்டா ஆகியோர் மறுத்தனர்.

பிரணாப் மூச்சுத்  திணறல் காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.  இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது.   அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இன்னும் உள்ளதாகவும் அவரது உடல் உறுப்புக்கள் சரியாகச் செயல்படுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.