டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவின் அனைத்து வியூகங்களும் துண்டு, துண்டாகி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையான சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடன் ஈரான் மேற்கொண்டது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கான நிதி தருவதில் மத்திய அரசு தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாக தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றி கொள்கிறோம் என்று கூறிய ஈரான், இந்தியாவை திட்டத்திலிருந்து நீக்கியது. இது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந் நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் அனைத்து வியூகங்களும் துண்டு, துண்டாகி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இந்தியாவின் சர்வதேச வியூகங்கள் அனைத்தும் துண்டு, துண்டாகி வருகிறது. அனைத்து இடங்களிலும் இந்தியா தனது மதிப்பையும், அதிகாரத்தையும் இழந்து வருகிறது. ஆகையால் மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.