வாஷிங்டன்,

மோடி அரசு அமல்படுத்தி உள்ள பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றின் காரணமாக மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மேலும்  சரியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்,  பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றின்  ஆய்வு கூட்டம் ஒரு வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது அந்த ஆய்வுகளின் முடிவு குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,  அதில், 2017 ம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, 0.5 சதவீதம் குறைவானது.

மேலும், 2018 ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பில் இருந்து 0.3 சதவீதம் குறைவானதாகும்.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின்  பணநீக்க நடவடிக்கையும் ஜிஎஸ்டியும்தான்  இந்தியப் பொருளாதாரத்தை பாதித்துள்ளன, ஏழைகள், விளிம்பு நிலை மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.