இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டில் 7.2 சதவீதமாக உயரும்! உலக வங்கி

டில்லி,

டப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, பணமில்லா பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறி வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் பொருளாதாரம் 2017-ம் ஆண்டில் 7.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.

மத்திய அரசின்  பணமதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் வளர்ச்சி தேக்கமடையவில்லை என்றும் உலக வங்கி கூறி உள்ளது.

கடந்த ஆண்டு 6.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டிய இந்தியா, இந்த ஆண்டு 7.2 வளர்ச்சியை எட்டும் என்றும் கூறி உள்ளது.

இது தொடர்பாக உலக வங்கியின் மேம்பாட்டு துறை செயல்பாடுகளுக்கான இயக்குநர் அய்ஹான் கோஸ் கூறியதாவது,

உலக வங்கியின் சமீபத்திய பொருளாதார அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.7 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 2017-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட கணிப்பைவிட இந்த இரண்டு ஆண்டுகளிலும் 0.3 மற்றும் 0.1 சதவீத வளர்ச்சி குறைவாக இது உள்ளது என்று குறிப்பிட்டார்.

2016-ம் ஆண்டில் சிறப்பான பருவ நிலை மற்றும் மழைப் பொழிவின் காரணமாக இந்தியாவின் விவசாய துறை செயல்கள் மற்றும் கிராமப்புற நுகர்வு சிறப்பாக இருந்தன.

இதன் காரணமாக கட்டமைப்பு முதலீடு கள் அதிகரித்தன. இதனால் அரசின் செயல்பாடுகளும் வலுவாக இருந்தது என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையிலும் கூறியுள்ளது.

அரசு முதலீடுகள் அதிகரிப்பு, முதலீடு சார்ந்த சீரமைப்புகள் மேம்பட்டு வருகிறது.

உற்பத்தி துறை வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.