செக் குடியரசு : 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார்

 

நோவ் மெஸ்டோ, செக் குடியரசு

செக் குடியரசு நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  இந்தியாவின் ஹிமா தாஸ்  தங்கப்பதக்கம் வென்றார்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டுப்பந்தய வீராக்கனை ஹிமா தாஸ் பல போட்டிகளில்  வெற்றி பெற்றுத் தொடர்ந்து பதக்கங்களைப் பெற்று வருகிறார்.  அவர் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி அன்று செக் குடியரசில் நடந்த 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார்.

நேற்று செக் குடியரசில் நடந்த 300 நடைபெறும் பந்தயங்களில் 300 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது.  இதில் இந்தியாவின் ஹிமா தாஸ் முதலில் வந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.   கடந்த ஜூலை 2 முதல் இவர் இதுவரை 6 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

இதே போட்டிகளில் ஆண்களுக்கான 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர்  முகமது அனாஸ் கலந்துக் கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.