ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவின் இளவேனிலுக்கு தங்கம்!

புதுடெல்லி: ஷேக் ரஸல் சர்வதேச ஏர் ரைஃபிள் ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வங்கதேச நாட்டின் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட மொத்தம் 6 நாடுகளின் வீரர் – வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

இதில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் 627.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

ஆண்கள் பிரிவில், இந்தியாவின் ஷாஹு துஷார், 623.8 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.