லக்சயா சென் – ஸ்காட்லாந்து ஓபன் பேட்மின்டன் ஒற்றையர் சாம்பியன்..!

எடின்பர்க்: சமீபகாலமாக, பேட்மின்டன் விளையாட்டில் இந்திய வீரர் – வீராங்கணைகள் செலுத்தும் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஸ்காட்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் இந்தியாவின் லக்சயா சென்.

இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், பிரேசில் நாட்டின் யகோர் கோயல்ஹோவை சந்தித்தார் இந்தியாவின் லக்சயா சென். இதில் முதல் செட்டில் தோல்வியடைந்த லக்சயா, இரண்டாவது செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இந்நிலையில் முக்கியமான மூன்றாவது செட்டை தளராமல் விளையாடி 21-19 என்ற கணக்கில் வென்று, கோப்பையையும் வென்றார்.

இந்தப் போட்டி மொத்தம் 56 நிமிடங்கள் நீடித்தது. இந்த சீசனில் மட்டும் லக்சயா பெறும் நான்காவது பட்டமாம் இது!