டில்லி

தோல் பொருட்கள் ஏற்றுமதி மிகவும் சரிந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தோலினால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் காலணிகள் சுமார் 13% மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ஏற்றுமதிக் குறைவு பிரதமர் மோடியின் அரசுக்கு ஒரு பின்னடைவாக உளது.  2020ஆம் ஆண்டுக்குள் தோல் தொழில் துறை வருவாயை இருமடங்கு உயர்த்த மோடி முயன்று வருகிறார்.  ஆனால் அது நடைபெறுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய தோல் ஆடைகள் மற்றும் காலணிகள் ஏற்றுமதியாளராக இந்தியா இருந்து வந்தது.  இருப்பினும் இந்த வருடத்தில் சென்ற ஆண்டை விட குறைவாகவே ஏற்றுமதி செய்துள்ளது.  இந்த ஆண்டு  இது வரை 674 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வருமானம் ஈட்டியுள்ளது.