இந்தியாவின் மிக நீண்ட பாலம்: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

அசாம்,

ந்தியாவின் மிக நீண்ட பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதையடுத்து அசாம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து  நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த பாலம் தான் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமாக அமைக்கப்பட்ட பாலம் அசாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  அசாம் – அருணாச்சலப்பிரதேச மாநிலங்களை இணைத்து இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

கடந்த  2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கிய இந்த பாலத்தின் கட்டுமான பணிகள், பா.ஜ.க. ஆட்சியில் 15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த பாலமானாது, பிரம்மபுத்திரா நதியின் மீது அசாம் மாநிலத்தின் சாதியா – அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டா நகர் ஆகிய நகரங்களிடையே 9.15  கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இதன் காரணமாக  அசாம், அருணாச்சலப் பிரதேசம் இடையிலான பயண நேரம் 4 மணி நேரம் குறையும் என்றும், இந்தப் பாலம், 60 டன் எடை கொண்ட பீரங்கிகள் எளிதாக சீன எல்லையை சென்றடையும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மும்பை பந்த்ரா – ஓர்லி இடையே கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை விட இந்தப் பாலம் 30 சதவீதம் நீளமானது.

இந்திய – சீன எல்லையில் பிரச்னை ஏற்பட்டால், ராணுவ வீரர்கள், இதன் வழியே உடனடியாக சீன எல்லைக்கு செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.