புதுடெல்லி: உலகெங்கிலும் கொரோனாவின் காரணமாக பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளதால், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி, மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி 60.3% என்ற அளவிலும், இறக்குமதி 58.7% என்ற அளவிலும் சரிந்து, வர்த்தகப் பற்றாக்குறை $6.8 பில்லியன் என்பதாக சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் வணிக ஏற்றுமதி 34.6% என்ற அளவில் இருந்தது மற்றும் அந்த அளவு ஏப்ரலில் மிகவும் சரிந்து 28.7% என்பதாக மேலும் குறைந்தது. ஏற்கனவே, அரசின் தவறானப் பொருளாதார கொள்கைகளால் தேக்க நிலையிலிருந்த இந்தியப் பொருளாதாரம், 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கால் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போதைய நிலையில், வணிக நடவடிக்கைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மாதம் முழுவதும் வணிக ஏற்றுமதி – இறக்குமதிகளில் வீழ்ச்சி நீடிக்கும் என்றே சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.