5 – 380 : உலக அழகு நகர் ஆழப்புழாவை வேண்டுமென்ற பின்தள்ளுகிறதா பாஜக அரசு

டில்லி

லகிலேயே சுத்தமான ஐந்து நகரங்களில் ஒன்று என ஐநாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலப்புழா நகரம் தூய்மை இந்தியாவால் 380 ஆம் நகரமாக பட்டியல் இடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் குப்பைகளைக் கையாண்டு அழிப்பது என்பது பெரும் பாடாக உள்ளது.  ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், “இந்தியாவில் குப்பைகள் ஒழிப்பதை சரியான முறையில் செய்யவில்லை என்றால் விரைவில் நாட்டிலுள்ள குப்பை மேடுகளின் மொத்த அளவு பெங்களூரு நகர பரப்பளவுக்கு வந்து விடும்” எனத் தெரிவித்தார். உலகெங்கும் சிறப்பாக குப்பைகளை சரியாக கையாளும் நகரங்களை தற்போது ஐநா தேர்ந்தெடுத்துள்ளது.  அதில் உள்ள முதல் ஐந்து நகரங்களில் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவும் ஒன்றாகும். இந்திய நகரங்களில் ஆலப்புழா மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தை ஏற்கனவே பிரதமர் மோடியும் பாராட்டியுள்ளார்.

ஆலப்புழைப் பள்ளிக் கழிப்பறைகள்

பத்து வருடங்களுக்கு முன்பு, ஆலப்புழாவில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டுவதும், அங்குள்ள கால்வாய்களில் விட்டு எறிவதும் வெகுநாட்களாக நிகழ்ந்துள்ளது.  இதற்காக பல போராட்டங்களை அந்த நகரின் சமூக ஆர்வலர்கள் நடத்தியுள்ளனர்.   கடந்த 2012ஆம் வருடம் ”எனது குப்பை, எனது பொறுப்பு” என்னும் பெயரில் நகரில் ஒரு இயக்கம் துவங்கப்பட்டது.  நகரில் உள்ள சுமார் 40000 வீடுகளும் ஒரு குப்பையை அழிக்கும் இயற்கை எரிவாயு அகத்துடன் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டது.  இதில் அனைத்து நீர்க்கழிவுகள், மற்றும் வீணாகப் போன உணவுகள், காய்கறிக் குப்பைகள் போன்றவை வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அவைகளை எரிக்கும் பணி துவங்கப்பட்டது.  அதில் கிடைக்கும் எரிவாயு மூலம் சிறிய அளவில் மின்சார உற்பத்தியும் நடக்க ஆரம்பித்தது.  இது தற்போது வளர்ந்து நகரத்தில் உள்ள அனைத்துக் குப்பைகளையும் அழித்து அதன் மூலம் எரிசக்தி, மின்சாரம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன.

திடக்கழிவுகளான பிளாஸ்டிக், கார்டு போர்டு, கண்ணாடி, காகிதம், உலோகம் போன்றவைகள் குப்பையை பொறுக்குபவர்களிடம் நேரடியாக அளிக்கப்படுகின்றது.  அவர்கள் அதை மறுசுழற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்து விடுகின்றனர்.   இது போல நடவடிக்கைகளால் ஆலப்புழாவில் தற்போது எங்குமே குப்பைகள் காணப்படுவதில்லை.  இந்த நகரின் மிகப்பெரிய குப்பை கொட்டும் இடம் கடந்த 2014ல் மூடப்பட்டது.

இந்தூர் பள்ளி கழிப்பறைகள்

இது இவ்வாறு இருக்க சமீபத்தில் தூய்மை இந்தியா இந்தியாவில் உள்ள சுத்தமான நகரங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  மொத்தம் 500 நகரங்களை பார்வையிட்ட இந்தக் குழு ஆலப்புழாவுக்கு 380 ஆவது இடத்தை அளித்துள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலரும் பிரபல நெட்டிசனுமான டோனி ஜோசப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதில் இந்தியாவில் உள்ள பல நகரங்களில் அதாவது ஆலப்புழாவை விட அதிக சுத்தமான நகரம் என  பட்டியல் இடப்பட்ட நகரங்களில் குப்பை கொட்டும் இடங்கள் என பல குப்பை மேடுகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

அதற்கு பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர்.  அதில் பெரும்பாலோனோர், ”கேரளாவில் பல நகரங்கள் சுத்தத்தில் முதலிடத்துக்கு தகுதியானவை.  எழில் கொஞ்சும் அழகு நகர் ஆலப்புழாவை கைவிட்டு இன்னும் குப்பை மேடுள்ள இந்தூர் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஏதும் அரசியல் இருக்கலாம்.” என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளனர்.  மற்றொருவர், “காவிக் கண்ணாடி போட்டோருக்கு சிவப்பு நிறம் தெரிய நியாயமில்லை” என பூடகமாக இதிலுள்ள அரசியலைப் பற்றிக் கூறி உள்ளார்.