கொரோனா – இந்தியாவில் தொற்றியோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நாள்தோறும் கொரோனா தொற்றுவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து குணமடைவோர் விகிதமும் அதிகரித்தே வந்தது. இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50 லட்சம் என்றாகியுள்ளது.

வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 878 என்பதாக உள்ளது.

அதில், சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 94 ஆயிரத்து 779 என்பதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்து 31 ஆயிரத்து 356 என்பதாகவும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 82,038 என்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா பாதிப்பில், நாட்டிலேயே, மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாமிடத்திலும் உள்ளது.