டெல்லி:

இந்திய கப்பல் படையில் 30 ஆண்டுகள் சேவை புரிந்த 58 ஆண்டு பழமையான விமானம் தாங்கி கப்பலுக்கு வரும் மார்ச் 6ம் தேதியுடன் ஓய்வு அளிக்கப்படுகிறது. ஐஎன்ஏ விராத் என்ற இந்த கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை. அதனால் அதை கழிவு பொருளாக விற்பனை செய்யக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் கப்பல் படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய 27 ஆயிரத்து 800 டன் எடை கொண்ட இந்த கப்பல் 1987ம் ஆண்டு இ ந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆண்டுகள மும்பையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகமாக மாற்றுவதன் மூலம் ஏற்படும் செலவை ஏற்பதில் ஆந்திர அரசுடன் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விற்பனை செய்யும் முடிவுக்கு பாதுகாப்பு துறை தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

13 அடுக்கு கொண்ட இந்த விமான தாங்கி கப்பலை அருங்காட்சியகமாக மாற்றி, பழமை மாறாமல் பராமரிக்க ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஏற்க ஆந்திரா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 50 சதவீத செலவு தொகையை ஆந்திரா அரசு கேட்கிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை பாதுகாப்பு துறை வழங்கும் என்றும், இதற்காக பெரிய அளவில் நிதியுதவி அளிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் தான் வரும் மார்ச் 6ம் தேதி மும்பையில் இந்த கப்பலை படையில் இருந்து விலக்க பாதுகாப்பு துறை அழுத்தமான முடிவை எடுத்துள்ளது. இக்கப்பல் ஓய்வு பெறும் விழாவில் கப்பல் படை தளபதி சுனில் லன்பா மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அதோடு ஆங்கிலேயர் கப்பல் படையை சேர்ந்த 20 வீரர்களும் கலந்துகொள்கின்றனர். முதல் கடல் இறைவன் என்று அழைக்கப்படும் பிலிப் ஜோன்ஸ் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கப்பல் நாட்டுக்காக இது வரை 5 லட்சம் நாட்டிக்கல் மைல் பயணம் செய்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.