நெருப்புக் குழம்புகளை கக்கும் எரிமலை – ஆராய்ச்சியாளர்கள் அச்சம்

இந்தியாவில் உள்ள ஒரே எரிமலை நெருப்புக்குழம்புகளை வெளியேற்றி வருவதால் ஆராய்ச்சியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த எரிமலை தற்போது குமுற ஆரம்பித்துள்ளது.

active-valcano

அந்தமான் நிகோபர் தீவிற்கு அருகில் இந்தியாவில் உள்ள ஒரே எரிமலை பாரன் தீவு எரிமலை. பெரும்பாலும் அமைதியுடன் காணப்படும் இந்த எரிமலை தற்போது புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியேற்றி வருகிறது. சமீபத்தில் இந்தோனேசியால் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்த எரிமலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

செப்டம்பர் 25ம் தேதி எரிமலை தீப்பிழம்புகளை கக்க தொடங்கியதாகவும், அதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் புவியியல் ஆய்வு மைய அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பல் அந்தமான் நிகோபர் தீவில் உள்ள எரிமலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தேசிய கடல் வள ஆய்வுக்குழு தெரித்துள்ளது.

ஜனவரி, 2017ம் ஆண்டு எரிமலை அமைந்துள்ள பாரன் தீவுக்கருகில் ஆய்வு மேற்கொண்டபோது திடீரென எரிமலையில் இருந்து புகையுடன் கூடிய சாம்பல் வெளியேறத் துவங்கியது என்றும், துர்நாற்றத்துடன் கூடிய சாம்பலும், எரிமலைக் குழம்பும் வெளியேறி மலைச்சரிவுகளில் வழிந்து கடலில் கலந்ததைப் பார்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இந்த எரிமலைக்குள் நிலக்கரி போன்ற படிவங்கள் இருப்பதால் நெருப்பு பிளம்புகள் வெளியேறி வருவதாகவும் அவர்கள் கூறினர். இந்நிலையில் பரான் தீவு எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் நெருப்பு பிளம்புகளை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர்.