ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றனர் இந்தியாவின் பூஜா ராணி மற்றும் விகாஸ் கிருஷ்ணன்!

அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசியளவிலான குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிகளில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் இந்தியாவின் பூஜா ராணி(75 கிகி) மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (69 கிகி).

ஏனெனில், இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகளில், அரையிறுதி வரை முன்னேறினால் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதிபெறலாம் என்பது விதிமுறை.

காலிறுதிப்போட்டியில்(75 கிகி), இந்தியாவின் பூஜா ராணி, தாய்லாந்தின் போர்னிபா சுடீயுடன் மோதி, 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இதன்மூலம் அரையிறுதியில் நுழைந்தார்.

ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில்(69 கிகி), இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், ஜப்பானின் ஒகாசவா குயின்சியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் இவர் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் வாய்ப்பைப் பெறுகிறார்.