Random image

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்: இந்திய வீராங்கணை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்

மெர்சின்:

துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

துருக்கி நாட்டில் மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலககோப்பை போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கப் ரியோ ஒலிம்பிக்கில் இவர் இறுதி போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற தீபா கர்மாகரால், இந்தியா பெருமை கொள்கிறது. இந்த வெற்றி அவரது விடா முயற்சிக்கு கிடைத்தது’’ என்று டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.