புதுடெல்லி:

ரசு ஊழியர்கள் தங்கள் பரந்த தோள்பட்டையில் கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியம் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளுடம் கலந்துரையாடிய அமைச்சர் ஜிதேந்திர சிங், கொரோனா தடுப்பு பணியில் அரசு ஊழியர்கள் ஆற்றி வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், நாட்டின் நிர்வாக திறங்களுடன், அரசியலமைப்பு மதிப்புகளை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், சிவில் சர்வீசஸ் தின நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமை தாங்கி வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் வாய்ப்புகள் அரசு ஊழியர்களின் பரந்த தோள்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் அக்டோபர் 31 ஆம் தேதி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் அரசாங்கத்தின் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் அளித்த ஆதரவு மூலம், அதாவது ஒரு மாத சம்பளத்தை வழங்கி,
பி.எம் கேர்ஸ் நிதிக்கு 4,227 கோடி ரூபாய்க்கு நிதி அளித்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த 6 ஆண்டுகளில், அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பதில் மற்றும் உரிமையாக்குவதில் குறிப்பிடத்தக்க சிவில் சேவை சீர்திருத்தங்கள், கூட்டுச் செயலாளர் மட்டத்தில் ஆட்சேர்ப்பு சீர்திருத்தங்கள், மின் சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்த பொது சேவைகளை மேம்படுத்துதல் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் பணியாற்றுவதற்காக இதுவரை 1,44,736 க்கும் மேற்பட்டோர் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இ-கற்றல் தளத்தில் (https://igot.gov.in) இணைந்துள்ளனர் என்றும், மேலும் 96 ஆயிரத்து 268 பேர் இந்த படிப்பை முடித்துள்ளனர் என்றும் ஜிஜேந்திர சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நிலையில் பணியாற்றுபவர்கள் தான் கொரோனா வைரசுக்கு எதிராக அரசுடன் இணைந்து போராடக்கூடியவர்கள். இந்த சிவில் சர்வீஸ் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.