டெல்லி:
சீன நிறுவனங்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறியுள்ள சீன தூதரக அதிகாரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு என்றும் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் மாநிலம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்திய சீன எல்லை பிரச்சினை யில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனா நிறுவனங்கள் மீது இந்திய அரசு நடவடிக்கைகளை இறுக்கி உள்ளது.
டிஜிட்டல் உலகை ஆட்டிப்படைத்து வரும் சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டு இருப்பதுடன், மேலும் ஏராளமான செயலிகளக்கு தடை விதிப்பது குறித்து பரிசிலனை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, சீன  நிறுவனங்கள் உலகளாவிய இந்திய டெண்டர்களில் பங்கு பெற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலை துறை போன்ற பல்வேறு துறைகளில் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் சீனாவுக்கு கடுமையாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் சந்தை விதிகளின்படி சீன வணிகங்கள் உட்பட இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
“சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு பரஸ்பர நன்மை பயக்கும். இத்தகைய ஒத்துழைப்பில் வேண்டுமென்றே தலையிடுவது இந்திய தரப்பினரின் நலன்களுக்கு சேவை செய்யாது.
இந்தியாவின் நடவடிக்கை சீன நிறுவனங்களின் நலன், அடிப்படை அருமையை பறிக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் நலனை காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.
சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க சீனாவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், சீன தூதரகம் பதில்  தெரிவிக்கும் வகையில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.