ரஷ்யன் ஒப்பன் பாட்மிண்டன் : இந்தியாவின் சௌரப் வர்மா வெற்றி

விலாண்டிவொஸ்டாக், ரஷ்யா

ஷ்யன் ஒப்பன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சௌரப் வர்மா வெற்றிபெற்றுள்ளார்.

இன்று  ரஷ்யா ஓப்பன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்று விலண்டிவோஸ்டாக் நகரில் நடைபெற்றது.  இதில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் தேசிய சாம்பியன் சௌரப் வர்மா ஜப்பானை சேர்ந்த வாட்னேபில் உடன் மோதினார்.  முதல் ஆட்டத்தின் முதல் சுற்றில் வாட்னேபிள் அபாரமாக விளையாடி 11-5 என்னும் செட் கணக்கில் முன்னணியில் இருந்தார்.

அடுத்தடுத்து வந்த சுற்றுக்களில் சௌரப் சிறிது சிறிதாக முன்னேறி வந்தார்.   இரண்டாவது ஆட்டத்தில் பிரமாதமாக விளையாடிய சௌரப் வெற்றியை கைப்பற்றினார்.  அவர் இந்த போட்டியில் 19-21, 12-12. 21-17 என்னும் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவருக்கு சாம்பியன் பட்டமும் 75000 அமெரிக்க டாலரும் பரிசாக கிடைத்துள்ளது.

You may have missed