இந்தியாவின் 2வது நீளமான ‘போகிபீல்’ பாலம்: மோடி இன்று திறப்பு

திஸ்பூர்:

ந்தியாவின் 2வது நீளமான ரயில்  பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த பாலம் அசாம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்கு கொண்ட இந்த போகிபீல் ரயில் மற்றும் சாலை  பாலத்தின் கீழ் பாலத்தில் ரயில் போக்கு வரத்தும், மேலடுக்கில் சாலை போக்குவரத்தும் நடைபெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தின்போது, கடந்த 2002ம் ஆண்டு இந்த பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.  அதன்படி இந்த பாலம் அசாம் மாநிலம் திப்ருகார் முதல் அருணாசலப் பிரதேசத்தின் பசிகாட் வரை ’போகிபீல் திட்டம்’ எனப்படும் சாலை-ரயில் பாலம் கட்டும் பணியை தொடங்கி நடைபெற்று வந்தது.

18 வருடங்கள் நடைபெற்று வந்த பாலப்பணிகள் முடிவுக்கு வந்த நிலையில், இன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்தியாவின் 2வது நீளமான பாலமான போகிபீல் பாலம்,  பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சுமார் 4.94 கி.மீ. தூரம்அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சுமார்  5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதுரு. இந்த பாலத்தின் கீழே இருவழி ரயில் பாதையும், மேலே மூன்று வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை பிரதமா் மோடி, வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி (இன்று) திறந்து வைக்கிறார். அத்துடன்  14 பெட்டிகள் கொண்ட முதல் பயணியர் ரயிலை, இன்று மோடி கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.

கார்ட்டூன் கேலரி