மல்யுத்தத்தில் தங்கம் : இந்திய வீராங்கனை சாதனை !

கிரீஸ்

லக அளவிலான சாம்பியன் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்  தங்கப் பதக்கம் வென்றார்.

கிரீஸ் நாட்டில் ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் 56 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிச் சுற்றில் இந்திய வீரங்கனை சோனம் மாலிக்  உடன் ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டா மோதினார்.  போட்டியில் 3-1 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக்  வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனையான நீலம் 43 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்று நடைபெறும் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனுஷு, ஜப்பான் நாட்டின் நயோமி ரூக்கியுடன் மோத இருக்கிறார்.  இதுவரை நடந்த போட்டிகளின் விவரப்படி அனுஷு தங்கப்பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.