உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 3பேர் காலிறுதிக்கு தகுதி

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகள் 3 பேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிங்கி ராணி, சோனியா சாஹல், சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு காலிறுதிக்கு முன்னேறினர்.

bozxing

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறாது. இதன் 57 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி சுற்றுக்கு முந்திய போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் பல்கேரியா வீராங்கனையை எதிர்கொண்டார். விறுவிறுபாக நடந்த போட்டியில் 3-2 என்ற கணக்கில் இந்தியாவின் சாஹல் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னேறினா.ர்

இதேபோல் 51 கிலோ எடைபிரிவில் மற்றுமொரு இந்திய வீராங்கனை பிங்கி ராணி இங்கிலாந்தை சேர்ந்து அலிசி எபோனிவுடன் மோதினார். இதில் பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் அலிசியை எளிதாக வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

அடுத்து நடைபெற்ற 64 கிலோ எடைப்பிரிவில் ஸ்காட்லாந்த் வீராங்கனை மெகன் ரிட்டை எதிர்கொண்ட இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார். இதன் மூலம் சிம்ரன் ஜித் கவுர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதேபோல், 75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.