இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மோதுகிறார்

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டி, அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தா நகரில் நடைபெற்ரு வருகிறது. இதில் நடந்த காலிறுதிப் போட்டியில் சூ வே வாங்-கைச் சந்தித்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல், இந்தியாவின் மற்றொரு வீரரான பிரணாயும் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில்  ஜப்பானின் கசுமசா சக்காயை எதிர்கொண்ட பிரணாய் 21-17, 26-28,18-21 என்ற செட்களில் போராடி தோற்றார்.  மற்றொரு போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான தென்கொரிய வீரர் சன் வான் ஹோவுடன் ஶ்ரீகாந்த் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியில், ஸ்ரீகாந்த் வென்றார்.

இதனால் இன்ரு நடக்கும், இறுதிப் போட்டிக்கு ஶ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். இந்த இறுதிப் போட்டியில் ஜப்பானின் சக்காய்யுடன் ஶ்ரீகாந்த் மோத இருக்கிறார்.

இந்தப்போட்டியை இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.