புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது

டில்லி:

புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய விமான கடத்தல் தடுப்புச்சட்டம் நாடு முழுவதும் ஜூலை 5ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. விமானத்தை கடத்தி பிணைய கைதிகளாக இருக்கம் பயணி, விமான சிப்பந்திகள், பாதுகாப்பு பணியாளர்கள் என யாருக்கேனும் உயிர்சேதம் ஏற்படுத்தினால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1982ம் ஆண்டு பிறப்பிக்கட்ட இச்சட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் விமானத்தில் அல்லது விமானநிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு மரணம் ஏற்படுத்தினாலும் தண்டனை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதர கடத்தல் சம்பவங்களில் ஆயுள் தண்டனை, அபராதம், கடத்தல்காரரின் சொத்துக்கள் அனைத்து பறிமுதல் செய்யும் வகையில் சரத்துக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், கடத்தல் முயற்சி, கடத்தல் மிரட்டல் போன்றவைக்கும் தண்டனை குறிப்பிடப்ப்டடுள்ளது. கடத்தலுக்கு திட்டமிடுபவர்களும், மற்றவர்களை கடத்த சொல்பவர்களுக்கு கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.