உக்ரைன் மல்யுத்தம் – தங்கம் வென்றார் இந்தியாவின் வினேஷ் போகத்..!

கிவ்: உக்ரைன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்தப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 53 கிகி பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்தியாவின் வினேஷ் போகத், அரையிறுதி சுற்றில், ருமேனியாவின் அனாவை வென்று, இறுதிக்கு முன்னேறினார். பின்னர், இறுதிச்சுற்றில், முன்னாள் உலகச் சாம்பியனும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை 10-8 என்ற கணக்கில் வென்று தங்கத்தைக் கைப்பற்றினார்.

வினேஷ் போகத், ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.