போதுமான மழை இல்லாததால் இந்தியாவின் கோதுமை உற்பத்தி வீழ்ச்சி அடையும் அபாயம்

மத்திய பிரதேசம்:

ந்தியாவின் கோதுமை உற்பத்தியானது, வரும் 2019-ம் ஆண்டில், குறைவான ஈரப் பதத்தினாலும், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி குறையும் போது உள்ளூரில் கோதுமை விலை உயர்த்தப்படும், மேலும் தானியத்தின் இறக்குமதி வரிகளை குறைப்பதற்கான கட்டாய நிலை ஏற்படலாம்.

இந்தியாவின் முதல் இரண்டு கோதுமை உற்பத்திக்கான மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வடக்கு மாநிலங்களில் தான், நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவிகிதத்திற்கும் அதிகமாக கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டு மாநிலங்களும் ஜூன்-செப்டம்பர் காலக் கட்டத்தில் சராசரியை விட பத்துமடங்கு குறைவான மழைப் பொழிவையே பெற்றன.

தண்ணீர் பற்றாக்குறை தவிர, அதிக வெப்பநிலையும் பயிர் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் ஒரே வகையான கோதுமையே பயிரிடப் படுகிறது. அவை, அக்டோபரின் பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட 15.7 மில்லியன் ஹெக்டர் அளவை விட இந்த ஆண்டு நவம்பர் 30 வரையிலான கணக்கெடுப்பின் படி 15.3 மில்லியன் ஹெக்டர்கள் மட்டுமே கோதுமை பயிரிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தின் மேற்கு பகுதி கால்வாய்களில் குறைவான மழை பெய்துள்ளதால், கோதுமை உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.