உலகில் மோசமான போக்குவரத்து உள்ள நகரம் மும்பை : ஆய்வு தகவல்

டில்லி

லகில் மோசமான போக்குவரத்து உள்ள நகரம் மும்பை எனவும் டில்லி நான்காவதாக உள்ளதாகவும் ஓர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பிட தொழில்நுட்ப (LOCATION TECHNOLOGY) நிறுவனமான டாம் டாம் என்னும் நிறுவனம் ஆப்பிள், ஊபர் போன்ற பல நிறுவனங்களுக்கு நகரின் வரை படங்களை அளித்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன.

அந்த ஆய்வறிக்கையில், “நெரிசலான நேரத்தில் மும்பையின் போக்குவரத்து நேரம் வழக்கத்தை விட 65% அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மும்பை நகரம் உலகில் மிகவும் மோசமான போக்குவரத்து உள்ள நகரம் என்னும் நிலையில் உள்ளது. மும்பை நகரில் கடந்த வருடம் மார்ச் 2 ஆம் தேதி அன்று நெரிசல் குறைவாகவும் (6%) ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி அன்று மிக அதிகமாகவும் (111%) இருந்துள்ளது.

இந்தியாவில் இதற்கு அடுத்தபடியாகவும் உலக அளவில் நான்காவது மிகவும் மோசமான போக்குவரத்து உள்ள நகரமாக டில்லி உள்ளது.   இந்நகரத்தில் நெரிசல் நேர பயண நேரம் 58% அதிகமாக உள்ளது.   உலக அளவில் பொகோடா இரண்டாம் இடத்திலும் லிமா மூன்றாம் இடத்திலும் டில்லி நான்காம் இடத்திலும் மாஸ்கோ ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் இந்நகரங்களில் போக்குவரத்து அதிகரித்த அளவுக்கு சாலை வசதிகள் அதிகரிக்காததே காரணமாகும். பல வருடங்களாக இந்த மோசமான போக்குவரத்து அனைத்து நகரங்களிலும் தொடர்ந்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.