இண்டிகோ விமான நிறுவன சர்வர் திடீர் பழுது! பயணிகள் கடும் அவதி!

டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர் பழுதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களுக்கு காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். இண்டிகோ நிறுவனத்தின் சர்வர் பழுதால் இந்த சிரமம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலான இந்த பிரச்னை நிலவியது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறி இருப்பதாவது: பயணிகள் சிரமத்துக்கு வருந்துகிறோம்.

பயணிகள் அனைவரும், எங்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தோம். வாடிக்கையாளர் சேவையை அதன்மூலம் அதிகாரிகள் செய்தனர்.

சர்வர் பழுதால், அனைத்து விமான நிலையங்களிலும் சேவை பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சரி செய்யப்பட்டது என்று கூறினர். முன்னதாக, இந்த பிரச்னை தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டது.