பயணியை அடித்து உதைத்த இண்டிகோ விமான ஊழியர்கள்!! அதிர்ச்சி வீடியோ

டில்லி:

கடந்த மாதம் 15ம் தேதி சென்னையில் இருந்து டில்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ராஜீவ் கத்தியால் என்பவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் பயணம் செய்தார். டில்லியில் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினல் செல்லும் இண்டிகோ பேருந்தில் ஏற சென்று கொண்டிருந்தார்.

அப்போது விமானநிலையத்தில் பணியாற்றும் இண்டிகோ நிறுவன ஊழியர்களுக்கு கத்தியாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பேருந்தில் ஏற முயன்ற கத்தியாலை 3 ஊழியர்கள் தாக்கி இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்துள்ளனர்.

இந்த காட்சியை மற்றொரு ஊழியரான மான்டூ கல்ரா என்பவர் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளனர். இச்சம்பவம் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த வீடியோ காட்சி வெளியானது. டைம்ஸ் நவ் சேனலில் இது ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இண்டியோ ஊழியர்களின் செயல்பாட்டிற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இச்சம்பவத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: IndiGo airlines staff manhandle passenger shocked video, பயணியை அடித்து உதைத்த இண்டிகோ விமான ஊழியர்கள்!! அதிர்ச்சி வீடியோ
-=-