மும்பை:

காத்மாண்டு விமான விபத்து எதிரொலியாக, 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்வதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பட்ஜெட் ரக விமானங்களை இயக்கி வருகிறது இன்டிகோ விமான நிறுவனம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 50 பேர் பலியான நிலையில், விபத்துக்குள்ளான ஏ320 நியோ வகை விமானங்கள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், ஸ்ரீநகர், கவுகாத்தி உள்பட பல பகுதிகளுக்கு வழக்கமாக சென்று வந்த சேவையை ரத்து செய்துள்ளது.

மேலும் இந்திய விமான நிறுவனம் இயக்குனர், ஏ320 நியோ விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பிடபிள்யு 1100 எஞ்சின் குறித்தும் உடனடி ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 1000 விமானங்களை இயக்கிவரும் இன்டிகோ நிறுவனம், உள்நாட்டு சேவையில் 40 சதவிகித விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.