தராபாத்

டிகை ரோஜா பயணம் செய்துக் கொண்டிருந்த திருப்பதி – ஐதராபாத் சென்ற இண்டிகோ விமானத்தின் டயர் இறங்கும் போது வெடித்ததால் 6 விமானங்கள் சென்னைக்கும் பெங்களூருவுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற நடிகையும் ஒய் எஸ் ஆர் காங்கிரச் கட்சியின் சட்டப்பேரவையின் உறூப்பினருமாகவும் உள்ளவர் ரோஜா.   இவர் நேற்று இரவு சுமார் 8.55 மணிக்கு திருப்பதியில் இருந்து ஐதராபாத் நகருக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6இ 7117 ரக விமானம் கிளம்பிய விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.   அந்த விமானம் இரவு 10.25 மணிக்கு ஐதராபாத் நகரில் இறங்கியது.   அப்போது திடிரென அந்த விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு உண்டாகியது.

டயர் வெடித்த அந்த விமானத்தில் ரோஜா உட்பட மொத்தம் 72 பேர் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.    இதனால் ஐதராபாத் விமான நிலையத்தின் ஓடுதளம் மூடப்பட்டது.   அதை ஒட்டி ஐதராபாத் விமான நிலையத்தில் இறங்க வேண்டிய 6 விமானங்கள்  சென்னை நகருக்கும், பெங்களூருவுக்கும் திருப்பி விடப்பட்டன.

Also Read