கொசு வலை அங்கிகள் அணியப்போகும் இண்டிகோ விமானங்கள்!

--

டில்லி

கொசுத்தொல்லை காரணமாக இண்டிகோ விமானங்களுக்கு கொசு வலை அங்கிகள் அணிவிக்கப்பட உள்ளன.

இண்டிகோ விமானப் பயணிகள் விமானத்தில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளதாக புகார்கள் தெரிவித்து வந்தனர்.   இதற்காக விமானத்தில் கொசு மருந்துகல் உபயோகிக்கப்பட்ட்டு வந்தன.   இந்த மருந்துகளின் வாடை பலருக்கு ஒத்துக் கொள்ளவில்லை.   மேலும் இதில் உள்ள ரசாயனங்களால் மனிதருக்கு தீங்கு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டது.  எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகளை கண்டறிய நிறுவனம் பல ஆய்வுகளை மேற்கொண்டது.

தற்போது கொசுக்களை அழிக்க எலக்ட்ரானிக் பேட்டுகள் உபயோகிக்கப்பட்டு வருவது தெரிந்ததே.   அதையே பெரிய அளவில் செய்து விமானங்களுக்கு ஒரு அங்கி போல அணிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த வலையில் கொசுக்கள் சிக்கிக் கொண்டால் உடனே மரணம் அடையும்.   அதனால் விமானத்துக்குள் கொசு நுழைவது முற்றிலுமாக நின்றுவிடும்.

இது குறித்து இண்டிகோ நிறுவன அதிகாரி ஒருவர், “இண்டிகோ விமானத்தில் கொசுத்தொல்லை தாங்க முடியாமல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பேட்டரியினால் இந்த கொசுவலை வங்கிகள் இயங்கும்.   விமானத்த்துக்கு எரிபொருள் நிரப்பும் போது மட்டும் இந்த அங்கியின் மின்சார சப்ளை நிறுத்தப்படும்.   ஒவ்வொரு விமான நிலையத்திலும் பேட்டரிகள் மாற்றப்பட உள்ளன” என தெரிவித்துள்ளார்.