இந்தியாவின் மிகவும் மோசமான விமான நிறுவனம் எது தெரியுமா?

டில்லி

ந்தியாவின் மிக மோசமான விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனத்தை  பாராளுமன்றக் குழு அறிவித்துள்ளது.

இந்திய சுற்றுலாத்துறை, கலாச்சாரத் துறை, சாலை, விமான மற்றும் வான்வழி போக்குவரத்துத் துறை  ஆகியவைகளை கண்காணிக்க பாராளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   இந்தக் குழுவின் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓ பிரெயன் நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த குழுவில் 30 பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி அந்த ஆய்வறிக்கையை குழுத் ஹ்டலைவர் ஓ பிரெயன் இடம் அளித்தது.   அந்த அறிக்கையை செய்தியாளர்களுக்கு ஒ பிரெயன் அளித்தார்.     அப்போது அவர், “இந்த ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் உள்ள தனியார் விமான நிறுவனங்களில் இண்டிகோவின் சேவை மிகவும் மோசமாக உள்ளது.

இது அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்துள்ள கருத்து ஆகும்.  இண்டிகோ குறித்து வாடிக்கையாளர்கள் ஏராளமான புகார்கள் அளித்துள்ள்னர்.   அதன்படி பார்க்கும் போது வாடிக்கையாளர்களில் இந்நிறுவனம் சரியாக நடந்துக் கொள்வதில்லை என்பது தெளிவாகி உள்ளது.    குறிப்பாக அனுமதிக்கப்பட்ட எடையை விட ஒரு கிலோ கூடுதலாக உள்ள லக்கேஜுக்கும் இந்நிறுவனம் அபராதம் வசூலிக்கிறது.

மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ நிறுவனம் அனைத்திலும் பின் தங்கி உள்ளது.    இதை நான் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆமோதித்துள்ளனர்.   லக்கேஜ் விவகாரத்தில் அரசு நிறுவனமான ஏர் இந்தியா நன்கு செயல்படுகிறது.   மற்ற விமானங்களும் ஏர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற வேண்டும்.

பயணசீட்டு ரத்து கட்டணம் அடிப்படை கட்டணத்தை விட  குறைவாக மாற்றப்பட வேண்டும்.   அது மட்டுமின்றி, ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுக்காக வசூலிக்கப்பட்ட வரி, எரிபொருள் கட்டணம் ஆகியவை பயணிகளுக்கு முழுவதுமாக திருப்பி அளிக்கப்பட வேண்டும்.   ஆனால் விமான நிறுவனங்கள் அவ்வாறு செய்வதில்லை.   ரத்து கட்டணமும் அதிகமாக  உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

You may have missed