ரஷ்யாவில் இந்திரகாந்தி 100வது பிறந்தநாள் நினைவு தபால் தலை வெளியீடு!!

மாஸ்கோ:

மறைந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் 100வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதன் நினைவாக ரஷ்யா நாட்டு தபால் துறை, இந்திராகாந்தி உருவம் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டு அவரை கவுரவப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு தபால் தலையில் இந்திராகாந்தியின் படத்திற்கு பின்னணியில் இந்திய தேசிய கொடி இடம்பெற்றுள்ளது.

இந்திரா காந்தி 1917ம் ஆண்டு பிறந்தார். 1984ம் ஆண்டு இறந்தார். 1966-1977 மற்றும் 1980-1984ம் ஆண்டுகளில் இந்திய பிரதமராக அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி