36வது நினைவு நாள்: இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா மலரஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படுபவருமான இந்திராகாந்தியின் 36வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

அதையடுத்து, டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இந்திரா காந்தியின் பேத்தியான  பிரியங்கா காந்தி சென்றார்.  அங்கு அவரது சமாதியில் மலர்களை தூவி பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து அங்கு வந்திருநத கட்சியின் மூத்த தலைவர்களும்  இந்திரா காந்தியின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினர்.