மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது!

டில்லி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்திரா காந்தி அமைதி காந்தி விருது அளிக்கப்படுகிறது.

அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்காக வருடம்தோறும் அளிக்கப்படும் இந்திரா காந்தி விருது, இந்த வருடம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படுகிறது.

தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காகவும், பருவ நிலை மாறுபாடு விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், மன்மோகன் சிங்குக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

இந்திரா காந்தி உயிரிழந்த பின் சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் இந்த விருது கடைசியாக இந்தியாவின் வி‌ண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கும், ஐ.நா.வின் அகதிகள் நல அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி