இந்திரா காந்தி 101வது பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் மரியாதை

டில்லி:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  டில்லியில், அவரது நினைவிடத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்திரா காந்தியின் 101-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.

இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக டிவிட் செய் துள்ள பிரதமர் மோடி டுவிட்டரில், இந்திரா காந்தியின் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.