டெல்லி:

ழக்கறிஞர் இந்திராவையும் நிர்பயா குற்றவாளிகளுடன் 4 தங்க வைக்க வேண்டும்  நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறினார்.

நிர்பயா குற்றவாளிகளை, நிர்பயாவின் தாயார் மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரபல பெண் வழக்கறிஞர்  இந்திரா ஜெயசிங்குக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில்  நடிகை கங்கனா ரனாவத்தும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்காக ஆஜராகும் பிரபல மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், குற்றவாளிகளை நிர்பயாவின் தாயார், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு சோனியா காந்தி மன்னிப்பு வழங்கியபோல வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஏற்க நிர்பயாவின் தாயார் ஆஷா மறுத்து விட்ட நிலையில், வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங்குக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான  கங்கனா ரனாவத்தும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை சத்தமே இல்லாமல் கொலை செய்வதில் (தூக்குத் தண்டனை) என்ன பயன் இருக்கப்போகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.

இந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.

இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலை காரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள்.  இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது”  என கடுமையாக விமர்சித்து உள்ளார்.