பெங்களூரு :

ர்நாடக அரசு இன்று தொடங்க இருக்கும் மலிவுவிலை உணவகமான ‘இந்திரா உணவகம்’  இன்று திறக்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த உணவகத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கிறார்.

ஏற்கனவே ஆகஸ்டு 15ந்தேதி முதல் கர்நாடகாவில் இந்திரா உணவகம் திறக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது, அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலையில் 3 வேளையும் உணவு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.

இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இதுபோல மலிவுவிலை உணவகங்களை தொடங்க மாநில அரசுகள் முயன்று வருகின்றன.

அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் மலிவுவிலை உணவகம்  திறக்கப்படும் என்றும், அதற்கு இந்திரா உணவகம் என பெயர் வைக்கப்படும் என்று  முதல்வர் சித்தராமையா ஏற்கனவே அறிவித்தி ருந்தார்.

இந்த உணவகத்தில் 5ரூபாய்கு டிபனும், 10 ரூபாய்க்கு மத்திய சாப்பாடும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மலிவு விலை உணவகமான இந்திரா உணவகத்தை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று  திறந்து வைக்கிறார்.

இதற்காக  கர்நாடக வந்துள்ள ராகுல்காந்தி, இந்திரா உணவகத்தை திறந்து வைத்ததும், இன்று மாலை நடைபெற இருக்கும் பொதுமக்கள் பேரணியிலும் கலந்து கொள்கிறார்.